எமது இலட்சியம்​

சே​வை பெறுநர்களின் முன்னேற்றம் மூலம் சிறப்படையும் வரை.

எமது குறிக்கோள்

அரசாங்க கொள்கைகளுக்கினங்க சேவைகளை வழங்குதல் ,வளங்களின் தொடர்பிணைப்புகள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடனான திட்டமிடப்பட்ட பயனுடைய அபிவிருத்திச் செயன்முறையொன்றின் மூலம் பிரதேச வாழ்மக்களின் வாழ்வினை மேலோங்கச் செய்தல்.

புவியியல் அமைவிடமும் பிண்ணனி அறிமுகமும்


மாத்தளை மாவட்டத்திற்கு தெற்குத் திசையை எல்லையாகக் கொண்டு அமைந்துள்ள உக்குவளை பிரதேச செயலகப் பிரிவு இரத்தோட்டை தேர்தல் தொகுதிக்குட்பட்டுள்ள உக்குவளை உபநகரம் புவியியல் கூறுகள் பரந்துள்ள அழகிய நகரமாகும். வடக்கே இரத்தோட்டை பிரதேச செயலகப் பிரிவினாலும் தெற்கே கண்டி மாவட்டத்தின் பாததும்பறை மற்றும் ஹாரிஸ்பத்துவ பிரதேச செயலகப் பிரிவினாலும் கிழக்கே நக்கிள்ஸ் மலைத்தொடராலும் மேற்கே குருநாகல் மாவட்ட எல்லையாலும் எல்லைப்படுத்தப்பட்டுள்ளது.

73 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் 228 கிராமங்களையும் உள்ளடக்கியுள்ள உக்குவளை பிரதேச செயலகப் பிரிவு உள்ளடங்குவது  மாத்தளை மாவட்டத்தின் இரத்தோட்டை தேர்தல் பிரிவிலாகும். உக்குவளை பிரதேச செயலகப் பிரிவின் பரப்பளவு 74.59 சதுர கிலோமீற்றர் ஆகும். (7458.82 ஹெக்டயர்). உக்குவளை பிரதேச செயலகத்திலிருந்து வத்தேகம - மாத்தளை பிரதான வீதியூடாக 6 கிலோமீற்றர் தொலைவில் மாத்தளை நகரத்தினை அடைய முடியும். பிரதேச செயலகப் பிரிவின் சாதாரண வெப்பநிலை 30 பாகை செல்சியஸ் ஆகும். சாதாரண மழைவீழ்ச்சி 2000 மி்ல்லிமீற்றரை  அண்மித்ததாகும். பருவமழைக் காலங்களிலேயே அதிக மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறுவதோடு, வடக்கீழ் பருவக்காற்று வீசும் செப்டெம்பர்  தொடக்கம் ஜனவரி வரையான காலப்பகுதியிலேயே பிரதேசத்திற்கு அதிக மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறுகின்றது.

 புவியியல் அமைவிடம்
74.59 சதுரகிலோமீற்றர் நிலப்பரப்பில் வியாபித்துள்ள உக்குவளை பிரதேச செயலகப் பிரிவானது கடல் மட்டத்திலிருந்து 1000 அடி உயரத்தில் அமைந்துள்ள பிரதேசமாகும். தடாக (பேசின்) அமைப்பாக தோற்றமளிக்கும் மாத்தளை மாவட்டத்திற்குரிய பிரதேச செயலகப் பிரிவும் தடாக (பேசின்) அமைப்பாக தோற்றமளிக்கின்றது. மத்திய மலைத்தொடரிற்குரிய இப்பிரதேசம் மலைத்தொடர் வலயத்திற்குரிய பாறைகளால் அமையப்பெற்றுள்ளது. இப்பிரதேசம் உருவாக்கம் பெற்றுள்ள கிரனைற் கிரனைற்றிஸ் எனும் பாறைக்கு மேலதிகமாக ஹொன்பெலன்டிஸ் பயோடைட் கிரனைற், குவாட்ஸ் சைட், கெலக் கிரனைஸ் மற்றும் க்ரெலையிட்ஸ் ஆகிய பாறை வகைகளையும் இப்பிரதேசம் முழுவதும் காணமுடியும். தற்போது நக்கிள்ஸ் மற்றும் உன்னஸ்கிரிய மலைகளை அண்மித்துள்ள பிரதேசங்கள் மண்சரிவு அபாயத்திற்குள்ளாகியுள்ளன.

பிரதேச செயலகப் பிரிவின் திசையமைவு தொடர்பாக கவனத்திற்கொள்ளும் போது முக்கியமாக குறிப்பிட வேண்டிய மலைகளும், மலைமீறல்களும் ஆகும். அக்கினி மூலையில் உன்னஸ்கிரிய மலைத்தொகுதியும் தெற்கில் குருலஹெல மலைத்தொகுதியும் (2570 அடி),  நிருதி மூலையில் பன்சலத்தென்ன மலைத்தொடராலும் (2500 அடி), மேற்கில் ஒவிலிகந்த மலைத்தொடராலும் (2100 அடி) உக்குவளை பிரதேச செயலகப் பிரிவு சூழப்பட்டுள்ளது. பலகடுவ மலைக்குன்று மற்றும் உக்குவளை - வத்தேகம மலைமீறல் ஊடாக இலங்கையின் மத்திய மலைகள் மற்றும் வடக்கு பிரதேசங்களை தொடர்புப்படுத்தும் வீதியமைப்பும் அமையப்பெற்றுள்ளது. அத்துடன் வில்ஷெயார் மற்றும் மகுலஸ்ஸ ஆகிய மலைகளுக்கிடையிலுள்ள மொரஹெல மலைமீறல் வழியாக மேற்கு பிரதேசங்களை தொடர்புப்படுத்துகின்றது

Role performed at DS

 பெயர் From To
எட்வர்ட் வீரசிங்க 1972-06-01 1975-12-31
எச்.எம்.பி. விக்ரமரத்ன 1976-01-01 1976-12-31
ஜெ.வீரவர்தன 1977-01-01 1977-08-11
வாரணன் மாப்பிடிகம 1977-08-12 1983-12-31
W.A.B.R. குணரட்ன 1984-01-01 1989-05-31
T.G.U.B.ம்புகலா 1989-06-01 1992-08-02
ஆர்.எம். சந்திரசேகர 1992-02-13 1992-08-02
ஆர்.கே.ஜி. குணவர்தன 1992-08-03 1992-08-18
பி.ஏ.ஜி. ஜெயவர்தன 1992-08-19 1995-01-01
ஜி.எச். ஜெயவீர 1995-01-02 2006-02-02
பி.ஏ.எஸ்.எச். போரலஸ்ஸ 2006-02-03 2008-09-07
கே.ஜி. உபாலி ரணவக 2008-09-08 2010-07-25
எல்.ஏ. சுஜாதா விஜேசிங்க 2010-07-26 2011-04-26
E.W.N.A எகோடவெல 2011-05-20  2019-
எஸ்.என்.கே.சேரசிங்க 2019-10-01  
Scroll To Top